#தனிமை

தனிமை என்று எதுவும் இல்லை 

நான் நாமாகி நிகழ்த்தும் அற்புதம் 


நமக்குள் நாமாகி

விழிக்குள் விரியும் உலகம் 


எடையற்ற மனதை 

எடை ஏற்றியோ இறக்கியோ 

விண்ணோக்கி செல்லும் நிலை 


உள்நோக்கி செல்லும் 

கடவுள் கூட காணக்கூடும் 


நாமறிந்த வழிகளிலே 

நாற்பகை அற்ற ஓர் நிலை 


நான் என்பதை மறந்த நிலை 


#tamilpoem #tamilhykoo #loneliness



Comments